எமது வழிகாட்டல்

என் இனிய தமிழ் உறவுகளே!

இன்று உலகெங்கும் 153 நாடுகளில் தமிழர் வாழ்வதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் வாழும் தமிழர் தமிழை மறந்துவிட்டனராம். இன்று எல்லோரும் கணினி, நடைபேசி, இணையம் என எல்லாமே கற்றுள்ளனர். இந்நிலையில் அவரவர் நாடாத்தும் வலைப்பூக்களைத் தொகுத்துப் பரப்புவதன் ஊடாகப் பலருக்கு அறிவையும் பிற பயன்களையும் வழங்க முடியுமென நாம் நம்புகிறோம்.

உங்களுக்குள்ளும் பல திறமைகள், படித்தறிவு, பட்டறிவு என ஏராளம் இருக்கிறது. மேலும் உங்கள் துறைசார் ஆற்றலை வெளிப்படுத்தும் எண்ணமும் உங்களுக்கு இருக்கலாம். எனவே, நீங்களும் வலைப்பூ ஒன்றைத் தொடங்கி உங்கள் எண்ணங்களைப் பகிர முன்வாருங்கள்.

Wordpress.com அல்லது Blogger.com தளத்திற்குச் சென்று கணக்கைத் திறந்து ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூக்களை அமைக்கலாம். நீங்கள் அமைத்த வலைப்பூக்களைப் பலருக்குப் பகிரத் தமிழ்நண்பர்கள், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைப்புச் செய்யுங்கள். மேலும் முகநூல், டுவிட்டர், கூகிள்பிளஸ், லிங்டின் போன்ற தளங்களிலுள்ள நண்பர்களுக்கும் உங்கள் புதிய பதிவுகளைத் தெரியப்படுத்தலாம்.

ஈற்றில் எமது தொகுப்பிலும் (Directory) உங்கள் தள முகவரிகளை இணைத்துவிடுங்கள். நாம் எமது தளத்தை உலகெங்கும் அறிமுகம் செய்யும் வேளை, உங்கள் தளமும் எல்லோருக்கும் தெரிய வந்துவிடுகிறது. இதனால், எல்லோரும் உங்கள் படித்தறிவை, பட்டறிவைப் பகிர முடியும். இச்செயலால் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண முடியுமென நாம் நம்புகிறோம்.

தள ஒழுங்கு முறை

Add a comment