எமது எண்ணங்கள்

எமது எண்ணங்களைப் பகிருகிறோம்.

எமது செயற்பாடுகள்

எமது 'வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள்' தளத்தில் இணைக்கப்பட்ட எல்லா வலைப்பூக்களையும் வலைப்பக்கங்களையும் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு அறிமுகம் செய்வதே எமது நோக்கு. அதனூடாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியுமென நாம் நம்புகின்றோம்.

முன்னணித் தேடல் தளங்களில் இதனை இணைப்பதோடு நின்றுவிடாமல் குமுகாயத் (சமூகத்) தளங்களில் அறிமுகம் செய்வதோடு நின்றுவிடாமல் இணையத் தள விளம்பரங்களில் வெளிப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் பதிவர்கள் தமது பதிவுகளில் இத்தளத்தை அறிமுகம் செய்வார்கள்.

அதேவேளை யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக 'அறிஞர்களின் பதிவுகள்' என்ற பிரிவில்(category) இங்கு இணைக்கப்பட்ட வலைப்பூக்களையும் வலைப்பக்கங்களையும் பற்றிய திறனாய்வை (விமர்சனத்தை) உங்கள் யாழ்பாவாணன் செய்வார். மேலும், தென்படும் எல்லா வழிகளிலும் இங்கு இணைக்கப்பட்ட வலைப்பூக்களையும் வலைப்பக்கங்களையும் நாம் அறிமுகம் செய்வோம்.

இச்செயற்பாட்டினூடாக எல்லோரும் இணைந்து உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியும். அதேவேளை இங்கு இணைக்கப்பட்ட வலைப்பூக்களையும் வலைப்பக்கங்களையும் நடாத்துவோர் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் பதிவுகளை அதிகம் தமது தளங்களில் இட்டு உதவுவீர்களென நம்புகின்றோம்.

எமது வழிகாட்டல்

என் இனிய தமிழ் உறவுகளே!

இன்று உலகெங்கும் 153 நாடுகளில் தமிழர் வாழ்வதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் வாழும் தமிழர் தமிழை மறந்துவிட்டனராம். இன்று எல்லோரும் கணினி, நடைபேசி, இணையம் என எல்லாமே கற்றுள்ளனர். இந்நிலையில் அவரவர் நாடாத்தும் வலைப்பூக்களைத் தொகுத்துப் பரப்புவதன் ஊடாகப் பலருக்கு அறிவையும் பிற பயன்களையும் வழங்க முடியுமென நாம் நம்புகிறோம்.

உங்களுக்குள்ளும் பல திறமைகள், படித்தறிவு, பட்டறிவு என ஏராளம் இருக்கிறது. மேலும் உங்கள் துறைசார் ஆற்றலை வெளிப்படுத்தும் எண்ணமும் உங்களுக்கு இருக்கலாம். எனவே, நீங்களும் வலைப்பூ ஒன்றைத் தொடங்கி உங்கள் எண்ணங்களைப் பகிர முன்வாருங்கள்.

Wordpress.com அல்லது Blogger.com தளத்திற்குச் சென்று கணக்கைத் திறந்து ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூக்களை அமைக்கலாம். நீங்கள் அமைத்த வலைப்பூக்களைப் பலருக்குப் பகிரத் தமிழ்நண்பர்கள், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைப்புச் செய்யுங்கள். மேலும் முகநூல், டுவிட்டர், கூகிள்பிளஸ், லிங்டின் போன்ற தளங்களிலுள்ள நண்பர்களுக்கும் உங்கள் புதிய பதிவுகளைத் தெரியப்படுத்தலாம்.

ஈற்றில் எமது தொகுப்பிலும் (Directory) உங்கள் தள முகவரிகளை இணைத்துவிடுங்கள். நாம் எமது தளத்தை உலகெங்கும் அறிமுகம் செய்யும் வேளை, உங்கள் தளமும் எல்லோருக்கும் தெரிய வந்துவிடுகிறது. இதனால், எல்லோரும் உங்கள் படித்தறிவை, பட்டறிவைப் பகிர முடியும். இச்செயலால் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண முடியுமென நாம் நம்புகிறோம்.

எமது வேண்டுகோள்

எமது தொகுப்பில் (Directory) உங்கள் வலைத் தள / வலைப்பூ முகவரிகளை இணைக்கும் முன் கீழ்வரும் தலைப்புகளையும் விளக்கங்களையும் கருத்திற்கொள்ளவும். இங்கு சமயம், அரசியல், பாலியல் போன்ற பதிவுகளைக் கொண்ட தளங்களை இணைக்க இயலாது.

மெய்யியலும் கோட்பாடுகளும்
வாழ்வுக்கு வழிகாட்டும் மெய்யியல் கோட்பாடுகள் (தத்துவங்கள்) கொண்ட தளங்கள்.

அறிவியலும் தமிழும்
தமிழ் மொழி மூல அறிவியல் (விஞ்ஞான/கணித) பதிவுகளைக் கொண்டவை.

கருத்துக்களமும் வலைத்திரட்டிகளும்
பலர் இணைந்து நடாத்தும் பல்துறைப் பதிவுகளைக் கொண்டதும் வலைப்பூப் பதிவுகளைத் திரட்டித் தருவதுமான தளங்கள்.

கணினி, நடைபேசி, இணையம்
தமிழ் மொழி மூலம் கணினி, நடைபேசி, இணையம் பற்றிய அறிவியல் பதிவுகள் இடம்பெறும் தளங்கள்.

மின்நூல்களும் கலைக்களஞ்சியங்களும்
தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்கவோ அருமையான தகவலைப் பொறுக்கவோ உதவும் தளங்கள்.

செய்தி மற்றும் பொழுதுபோக்கு
சமையல், திரை (சினிமா), வானொலி, தொலைக்காட்சி, மற்றும் செய்தித் தளங்கள்.

உளவியலும் வழிகாட்டலும்
உளச் சிகிச்சை முறைகளும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) கொண்ட தளங்கள்.

ஊடகவியலும் தமிழும்
அச்சு, மின் ஊடகங்களில் எப்படித் தமிழைப் பேணலாம் பற்றி விளக்கும் தளங்கள்.

மூளைக்கு வேலை
தமிழ்ப் பழமொழிகள், விடுகதைகள், புதிர்க் கணக்குகள், நொடி அவிழ்த்தல் போன்ற பதிவுகளைத் தாங்கி வரும் தளங்கள்.

மருத்துவத் துறை
தமிழ், (தமிழ் மொழி மூல) ஆங்கில மருத்துவ வழிகாட்டல்.

தமிழும் தமிழர் வரலாறும்
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு பற்றிய வரலாற்றுப் பதிவுகளும் ஆய்வுக் கண்ணோட்டங்களும் கொண்ட தளங்கள்.

தமிழ் இலக்கியமும் படைப்புகளும்
கட்டுரை, நகைச்சுவை, கவிதை, பாட்டு, கதை, நாடகம் போன்ற படைப்புகளைத் தாங்கி வரும் தளங்கள்.

வீடும் வீட்டு நடப்பும்
இல்லம், இல்லாள், குழந்தை வளர்ப்பு, சமையல், முதியோர் நலம் பேணல் போன்ற பதிவுகளைத் தாங்கி வரும் தளங்கள்.

தமிழும் தமிழ் இலக்கணமும்
தமிழ் மொழி விளக்கம், தமிழைப் பேணல், தமிழைக் கற்பித்தல், தமிழ் இலக்கணம் போன்ற பதிவுகளைத் தாங்கி வரும் தளங்கள்.

தமிழ் மொழி மூலக் கல்வி
தமிழ் மொழி மூலம் கல்வி கற்கத் துணை நிற்கும் தளங்கள்.

உங்கள் தளம் மேற்காணும் தலைப்புகளில் ஒன்றை சார்ந்ததாயின் http://tamilsites.doomby.com/directory/ என்ற பகுதியில் Submit A Website என்பதனைச் சொடுக்கி கேட்கப்பட்ட தகவலை வழங்கி இணைக்க முடியும். தளமேலாளரின் அனுமதி கிடத்ததும் எமது தொகுப்பில் (Directory) சேர்க்கப்படும்.